IMDB இந்திய அளவில் டாப் ரேட்டிங் படங்கள் : 250-இல் 62 இடங்களை பிடித்து தமிழ் சினிமா சாதனை…

IMDB வெளியிட்டுள்ள இந்திய அளவிலான டாப் 250 படங்களின் பட்டியலில் 62 தமிழ் படங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.

இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் எனப்படும் ஐஎம்டிபி இணைய தளம் உலகம் முழுவதும் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ் குறித்த தகவல்களை கொண்டுள்ளது. சர்வதேச அளவில் அதிகம் பார்வையிடப்படும் நம்பத் தகுந்த சினிமா தளமாக ஐஎம்டிபி செயல்பட்டு வருகிறது.

இந்த தளத்தில் ஒரு படம் அதிக ரேட்டிங்கை பெறும்போது அது பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெறும். இதில் உறுப்பினராக இருப்பவர்கள் படம் குறித்த ரேட்டிங்கை பதிவு செய்யலாம்.

அந்த வகையில் இந்த ஐஎம்டிபி தளத்தில் 8 புள்ளிகளுக்கும் அதிகமாக பெறும் படங்கள் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய அளவில் டாப் 250 படங்களின் பட்டியலை ஐஎம்பிடி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 62 இடங்களை தமிழ் படங்கள் பிடித்துள்ளன.

பட்டியலில் உள்ள தமிழ் படங்கள் பின்வருமாறு :

நாயகன், ராக்கெட்ரி, அன்பே சிவம், பரியேறும் பெருமாள், ஜெய் பீம், சூரரைப் போற்று, கிரீடம், 96, கைதி, சீதாராமம், அசுரன், விசாரணை, தேவர் மகன், தளபதி, சார்பட்டா பரம்பரை, தனி ஒருவன், வடசென்னை, அந்நியன், பேரன்பு, ராட்சசன், சூது கவ்வும், ஜிகர்தண்டா, துருவங்கள் 16, புதுப்பேட்டை, மண்டேலா, பாபநாசம், அருவி, முதல்வன், விக்ரம், இருவர், சூப்பர் டீலக்ஸ், பாகுபலி 2, பாட்ஷா, பிதாமகன், பாம்பே, இந்தியன், வாரணம் ஆயிரம், படையப்பா, விடுதலை 1, கர்ணன், விண்ணைத்தாண்டி வருவாயா, தெய்வத்திருமகள், மாநகரம், ஆடுகளம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், லவ் டுடே, ஹே ராம், துப்பாக்கி, போக்கிரி, கில்லி, கத்தி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *