கனடாவில் குடியிருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
கனடாவில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் ஊடாக நாட்டிற்குள் தட்டம்மை நோய் பரவுகை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையை அந்நாட்டின் பிரதம மருத்துவ அதிகாரி திரேசா டேம் விடுத்துள்ளார்..
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தட்டம்மை தடுப்பூசிகள்
கனடாவை விட்டு வெளியேறுவோர் குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வோர் தட்டம்மை தடுப்பூசிகள் இரண்டு ஏற்றிக் கொண்டதனை உறுதி செய்ய வேண்டுமென திரேசா டேம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இவ்வாறு தடுப்பூசி ஏற்றிக் கொண்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் தட்டம்மை நோய் அதிகளவில் பரவாத போதிலும் நோய்த் தொற்று பரவும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.