வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு. பிப்ரவரி 29 வரை கால அவகாசம் நீட்டிப்பு.!!
வாகன ஓட்டிகள் தங்களுடைய FASTag கார்டுகளின் கேஒய்சி யை புதுப்பிப்பதற்கு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கேஒய்சி முழுமை அடையாத FASTag கார்டுகள் ஜனவரி 31ஆம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பிப்ரவரி 29ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் ihmcl.co.in என்ற இணையதளத்தில் லைசென்ஸ், ஆதார் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை சமர்ப்பித்த புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.