பாலியல் ஆரோக்கியம் மேம்பட மண்டுகாசனம்: யோகா நிபுணர் வீடியோ
யோகாவில் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல நமது மன ஆரோக்கியத்திற்கும் கூட பல நன்மைகள் உள்ளன.
யோகா பயிற்சியாளர் ஜூஹி கபூரின் கூற்றுப்படி தவளை போஸ் அல்லது மண்டூகாசனா- ஒரு மாதத்திற்கு தினமும் பயிற்சி செய்தால் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மண்டுகாசனம் என்பது சமஸ்கிருத சொல். இதில் மண்டுகா என்பது தவளை. இந்த போஸ் ஒரு தவளையின் தோரணையின் இயற்பியல் அம்சத்தை பிரதிபலிப்பதோடு, இயற்கையைக் கவனிப்பதன் மூலம் உள்ளார்ந்த அமைதி, தியானம் பற்றிய யோசனையையும் குறிக்கிறது.
மண்டுகாசனம், பாலியல் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளதா
ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-ஓவேரியன் அக்சஸ் (Hypothalamic-Pituitary-Ovarian) முதன்மையாக பெண் இனப்பெருக்க அமைப்பின் ஒழுங்குமுறையுடன் தொடர்புடையது, அதே சமயம் ஹைபோதாலமிக்-பிட்யூட்டரி-கோனாடல் அக்சஸ் (Hypothalamic-Pituitary-Gonadal) ஆண்களின் இனப்பெருக்க அமைப்பை ஒழுங்குபடுத்துகிறது.
இந்த ஹார்மோன் அக்சஸ் கருவுறுதல் மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்டுகாசனா அல்லது தவளை போஸ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் சில நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்த விளைவுகள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை மற்றும் தனிநபர்களிடையே வேறுபடலாம், என்று யோகா பயிற்றுவிப்பாளர் ஃபெனில் புரோஹித் விளக்கினார்.