”இதய ஆரோக்கியத்தை” மேம்படுத்தும் இயற்கை மருத்துவ குறிப்புகள்!
உலக அளவில் இதய நோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு அதிகரிக்கிறது. ஒழுங்கற்ற உணவு முறை தவறான வாழ்க்கை போன்றவற்றை தேர்வு செய்வதன் மூலம் இதய நோய் வளர்ச்சி மேம்படுகிறது.
அதனால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்காக ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான வாழ்க்கை முறையை பராமரிக்க வேண்டும்.
* வால்நட், பாதாம் போன்ற கொட்டைகள் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்ற உணவு நடு உணவின் பசியை போக்கும்.
* கொட்டை உணவுகள் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன்கள் அல்லது கெட்ட கொழுப்புகளை குறைக்கின்றது.
* ஸ்ட்ராபெர்ரி, அவுரி, நெல்லிகள், குருதி நெல்லிகள் போன்ற பெர்ரி வகைகளில் அதிக அளவிலான பைட்டோ நியூட்ரியான்கள் மற்றும் கரையக்கூடிய நார்சத்து உள்ளது. இதனை தயிருடன் அல்லது தானியங்களுடன் சேர்த்து உணவாக உட்கொள்ளும் பொழுது ஆரோக்கியம் பெருகும்.
* ஆளி விதைகள் இதயத்தை ஆரோகியமாக வைத்துக் கொள்ளும் முக்கிய உணவாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொள்ளும் போது அதன் முக்கிய நன்மையை பயக்கும்.
* ஏராளமான வைட்டமின்கள் தாது கொழுப்பை குறைக்கும் நார்ச்சத்து கொண்டது ஓட்ஸ். இது ஊட்டமளிக்கிறது. அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பழங்கள், பால் அல்லது காய்கறிகளுடன் காலை உணவில் ஓட்ஸ்எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை தவிர்க்க உதவும்.