”கண்பார்வையை மேம்படுத்தும்” இயற்கை மருத்துவ குறிப்புகள்!
ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படையாக இருப்பது நல்ல உணவு என்றாலும் மற்றொருபுறம் நீண்ட நேரமாக போன் அல்லது லேப்டாப் பார்ப்பதால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது.
மேலும் கண்களில் வலி, கிட்டப் பார்வை, தூரப்பார்வை கோளாறைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக ஒரு சில உணவுப் பொருட்களை தினமும் எடுத்துக் கொண்டால் கண் பார்வை மேம்படும்.
* முட்டையில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் கண் பார்வை திறனை அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி, இ மற்றும் துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளது, இதனை உட்கொள்ளும் பொழுது உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கும். மேலும் லூட்டியின் போன்ற தாது பொருட்கள் அதிக அளவில் உள்ளதால் கண்பார்வையை வலுவாக வைத்திருக்கும்.
* கண்களின் சக்தியை அதிகரிக்கும் தன்மை கேரட்டில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா, கரோட்டின் போன்றவை கண்பார்வை திறனை அதிகரிக்கிறது. கண்களில் வலி இருந்தால் அதனையும் குணப்படுத்துகிறது. தினமும் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கேரட் சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
* பாதாமில் வைட்டமின் இ அதிகமாக உள்ளதால் கண் பார்வை குறைபாடுகளை சரி செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தும் நிலையற்ற மூலக்கூறுகளில் இருந்து பாதாம் கண்களை பாதுகாக்கும். தினமும் மூன்று அல்லது நான்கு பாதாம் பருப்பை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மேம்படும்.