இன்னும் 28 நாட்களில் குரு நட்சத்திரத்தில் சனி நட்சத்திர பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பலவான். இவர் நாம் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன் தரக்கூடியவர். சனி பகவான் நவக்கிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சனி பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் 07 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரம் அதாவது குருவின் அதிபதி நட்சத்திரத்தில் செல்லவுள்ளார். சனி பகவான் குரு பகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அனைத்து ராசிகளிலுமே இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் சுபமாகவே தெரியும். எனினும் சனி நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். அதனுடன் நல்ல பண வரவு, வேலையில் ப்ரமோஷன், சம்பள உயர்வு, குழந்தை பாக்கியம் உண்டாகும். எனவே சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும் என்று பார்ப்போம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் லாபகரமான பலனைத் தரும். நிதி நிலை மேம்படும், இதனால் ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து நல்ல செய்தியைப் பெறலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். பழைய முதலீடு மூலம் நல்ல லாபம் பெறலாம். நீண்ட காலமாக ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இப்பெயர்ச்சிக்கு பின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும் மற்றும் அவருடன் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.
ரிஷபம் (Taurus Zodiac Sign): ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சி (Saturn Nakshatra Transit 2024) மிகவும் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து வேலை வாய்ப்பை பெறலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வீடு, வாகனம் வாங்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த நட்சத்திர பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். கூட்டுதொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் மங்களம் உண்டாகும். ஏப்ரல் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகும். அனைத்து காரியங்களிலும் வெற்றி மழை கொட்டும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களை மாணவர்கள் பெறலாம். உடன் வேலை செய்வோரிடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சனி பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.