அணு ஆயுத தாக்குதல் நடந்தால்..?Google AI வழங்கிய பிரித்தானியாவின் ஆபத்தான மற்றும் பாதுகாப்பான இடங்கள் பட்டியல்
மூன்றாம் உலகப் போர் அல்லது அணு ஆயுதப் தாக்குதல் தொடங்கினால் பிரித்தானிய மக்களுக்கு எந்தெந்த இடங்கள் மிகவும் பாதுகாப்பானவை.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் கிட்டத்தட்ட 716 நாட்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகிறது, உக்ரைன் செர்ந்த பல மில்லியன் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இன்னலில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல அமெரிக்க ஊடகவியலாளரான Tucker Carlson உடன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் நீண்ட நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.
இதில் உக்ரைன்-ரஷ்யா போரின் தற்போதைய நிலை, உலக தலைவர்களின் நிலைப்பாடு மற்றும் அதன் போரின் முடிவு எவ்வாறு அமையும் என்பது போன்ற முக்கிய விவரங்களை புடின் நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், உக்ரைனுடன் ஒப்பந்தம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு 18 மாதங்களுக்கு முன்பே போர் நிறைவடைந்து இருக்கும். ஆனால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அனைத்து முடிவுகளையும் தகர்த்ததாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பாதுகாப்பான இடம் எது?
ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து ஐரோப்பிய பிராந்தியங்களும் பரவும் அபாயம் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு ஐரோப்பிய பிராந்தியத்தில் மூன்றாம் உலகப் போர் அல்லது அணு ஆயுதப் போர் முன்னெடுக்கப்பட்டால், பிரித்தானியாவின் லண்டன் நகரம் முக்கிய தாக்குதல் குறியாக இருக்கும் என்று கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Bard(gemini pro) தெரிவித்துள்ளது.
இதனுடன் பாதுகாப்பான நான்கு பிரித்தானிய நகரங்களையும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தெரிவித்துள்ளது.
கூகுளின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான Bard வழங்கிய தகவலின் அடிப்படையில், ஆர்க்னி தீவுகளில்(Orkney Islands) கிர்க்வால்(Kirkwall), ஷெட்லாண்ட் தீவுகளில்(Shetland Islands) லெர்விக்(Lerwick), வேல்ஸில்(Wales) உள்ள ஆங்கிள்ஸி(Anglesey), மற்றும் இங்கிலாந்தில்(England) கார்ன்வால்(Cornwall). ஆகிய பிரித்தானிய நகரங்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் ஓரளவு பாதுகாப்பான இடங்களாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
மேல் குறிப்பிட்ட 4 நகரங்களும் மக்கள் தொகையில் குறைந்த அடர்த்தி கொண்ட பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.