ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் குண்டுமழை பொழிந்த உக்ரைன்! குழந்தைகள், பெண்கள் உட்பட 25 பேர் பலி

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான டொனெட்ஸ்கில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் தாக்குதல்
கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக ரஷ்யாவும், கீவ்வும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.
இந்த நிலையில், Donetsk பகுதியில் உள்ள கூட்ட நெரிசலான சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோசமான உயிரிழப்புகள்
இப்பகுதி ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதி ஆகும். பிராந்தியத்தின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நிர்வாகத்தின் தலைவர் Denis Pushilin, உயிரிழப்பு எண்ணிக்கையை உறுதி செய்துள்ளார்.
அத்துடன் உக்ரைனை இதற்கு குற்றம்சாட்டிய அவர், மக்கள் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் எனவும் குறிப்பிட்டார். ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
2022ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, Donetsk பகுதி தற்போது மோசமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், ரஷ்யாவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகள் மீதான இரண்டு தாக்குதல்களுக்கு கீவ் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.