பொய்த் தகவல்களை பரப்புவதில் எந்த நாடு முதலிடம்? அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட டேட்டா!
சென்னை: பாஜக வின் பொய் பரப்பும் நிறுவனங்கள் மூலம் உலகளவில் நாட்டிற்கு தான் கெட்டப்பெயர் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
”World Economic Forum, 2024 Global Risk Report 4, படி தவறான தகவல்கள் மக்களிடத்தில் பரப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதுவும் தேர்தல் நேரத்தில் பொய்யான தகவல்கள் மூலம் இந்திய மக்கள் தவறான வழியில் நடத்தப்படுகின்றனர். இந்த அறிக்கையுடன் மோடி அவர்களின் கல்வி தகுதி பற்றி மக்களிடம் பரப்பபட்ட தகவலை பொறுத்தி பார்க்கும் போது பாஜக திட்டமிட்டு எவ்வாறு பொய்யான தகவல்களை பரப்புகிறது என்பதை மக்கள் புரிந்துக் கொள்வார்கள். ”
”ஏற்ற தாழ்வை போதிக்கும் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் இருந்து எழுந்த போது, பாஜக-வின் பொய் பரப்பும் நிறுவனங்கள் இந்து மதத்தை தமிழக தலைவர்கள் அழிக்க வேண்டும் என கூறுகிறார்கள் என்று தேர்தலில் பிரச்சாரங்கள் செய்தன. குறிப்பாக மக்களிடம் வெறுப்பை விதைக்க இவ்வாறு தவறான தகவல்கள் பரப்படுகின்றன. இந்த அறிக்கை மற்றொரு முறை மோடி அவர்களின் ஊதி பெரிதாக்கப்பட்ட போலி பிம்பத்தை மக்கள் முன் எடுத்துக் காட்டி உள்ளது. ”
”மேலும் இவ்வறிக்கை மக்கள் விழிபுணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இந்த அறிக்கை தமிழக மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் மத்திய அமைச்சர்கள் கூட தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் தவறான தகவல்களை பரப்புவதை நாம் கண்கூடாக பல முறை பார்திருக்கிறோம். அதே போல வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பாஜக திட்டமிட்டு தமிழகத்தில் பொய் செய்தியை பரப்பியது. ”
”அயோத்தி இராமர் கோவில் திறப்பின் போது தமிழகத்தில் பூசாரிகள் அச்ச உணர்வில் இருக்கிறார்கள் எனவும் அது பொய் செய்தியை பரப்பியது. Washington post பத்திரிக்கையும் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி அன்றே இதே போன்று பாஜகவின் பொய் பரப்பும் நிறுவனங்களை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டி உள்ளது. இந்திய அளவில் மட்டும் அல்லாமல் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்சினையிலும் பாஜகவின் பொய் பரப்பும் நிறுவனங்கள் உலக அளவில் பொய்களை கூறுவதில் சாதனை படைத்துள்ளன என்பதை அக்டோபர் 21, 2023 அன்று The Diplomat பத்திரிக்கை செய்தி கூறி இருந்தது. எது எப்படி இருபினும் பொய் கூறுவதில் இந்தியாவை உலகதின் முதல் இடத்திற்கு கொண்டு வந்த மோடியை பாராட்டுவோம்.” இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தனது பதிவில் கூறியுள்ளார்.