நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் அமலுக்கு வருகிறது! ‘குடி’மகன்கள் வரவேற்பு!

முன்னதாக நீலகிரி போன்ற மாவட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு ‘குடி’மகன்களிடையே வரவேற்பு எழுந்துள்ளதையடுத்து மேலும் சில மாவட்டங்களில் இந்த திட்டம் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டத்திலும் மலை பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில், சுற்றுலாவுக்கு வருபவர்களில் பலரும் பொது இடங்களில் காலி மதுபாட்டில்களை வீசி விட்டும், உடைத்து விட்டும் செல்கின்றனர். வனப் பகுதிகளிலும் இவ்வாறு பலரும் பாட்டில்களை உடைத்துப் போட்டு செல்வதால், வனவிலங்குகளும் உயிரிழக்கின்றன. இவ்வாறு வீசிச் செல்லப்படும் காலி மதுபான பாட்டில்களால் இயற்கை சூழலுக்கும் வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடைமுறைபடுத்த உத்திரவிட்டது.இந்த திட்டம் நீலகிரியில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டது.

பிற மாவட்டங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்ததையடுத்து கோவை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறப்படும் எனவும், இதற்கான ஸ்டிக்கர் மது பாட்டிலிலேயே ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் ஒப்படைத்து ரூ.10 பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *