3வது டெஸ்ட்டில் அவசரப்பட்டு இந்த தவறை செய்யாதீங்க.. எச்சரிக்கையா இல்லைனா ஆபத்து- EX வீரர் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவசரப்பட்டு இந்த தவறை செய்து விடக்கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அறிவுரை கூறியுள்ளார்.
எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட்டுகளுக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று காயம் காரணமாக விலகிய ஜடேஜா மற்றும் கே எல் ராகுல் தற்போது மூன்றாவது டெஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் அவர்களுடைய காயம் குணமடைந்தால் மட்டுமே இடம்பெறுவார்கள் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஜடேஜா இந்திய டெஸ்ட் அணியில் தவிர்க்க முடியாத வீரர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அதேசமயம் அவர் தவிர்க்க முடியாத வீரர் என்பதற்காக அவரை உடனடியாக பிளேயிங் லெவனனில் சேர்க்க வேண்டும் என்று அவசரம் காட்டக் கூடாது.
ஏனென்றால் அவர் பேட்டிங் பௌலிங் பீல்டிங் என மூன்றுமே செய்ய வேண்டும். இந்திய அணியில் உண்மையான 3d வீரர் அவர்தான். எனவே அவரை பத்திரமாக கையாளுங்கள். ஜடேஜா பிளேயிங் லெவனுக்குள் வந்தால் இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாடலாமா என்று யோசிக்கக்கூடும்.
இதேபோன்று கே எல் ராகுல் உடல் தகுதியுடன் இருந்தால் அவரை அணிக்குள் கொண்டு வந்துவிடலாம். ஏனென்றால் அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்யவில்லை. வெறும் பேட்ஸ்மேனாக தான் இந்த தொடரில் விளையாடுகிறார். ஒருவேளை கே எல் ராகுல் 100% முதல் தகுதியை பெறவில்லை என்றால் சர்பிராஸ் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடுவார்.
ஆனால் கே எல் ராகுலுக்கு வெறும் தசைப்பிடிப்பு தான் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் திரும்புவார் என நினைக்கிறேன். அப்படி அவர் விளையாடினால் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கிய நம்பர் நான்காவது இடத்தில் இருந்தார். அந்த இடத்தில் ராகுல் இருப்பார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.இந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை. இதேபோன்று முஹமது ஷமியும் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை.அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டிருக்கிறார்.