முதல் மேட்ச்சே முதுகில் குத்திட்டீங்களே.. தலையில் கை வைத்து அழுத சர்பிராஸ்.. மன்னிப்பு கேட்ட ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ் கான் 62 ரன்களில் ஆட்டம் இழந்தவுடன் பெவிலியனுக்கு சென்று அழுத சம்பவம் அரங்கே றி இருக்கிறது. எப்போதுமே வாய்ப்பை தேடி திறமையான நபர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
அப்படி அந்த வாய்ப்பை கிடைக்கும் போது அதனை சரியாக பயன்படுத்த சிலர் உயிரையே கொடுப்பார்கள். இப்படித்தான் தன்னுடைய 10 ஆண்டுக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறார்.
இந்த நிலையில் பல போராட்டம், ஏமாற்றம், வலி, கண்ணீருக்கு பிறகு மூன்றாவது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனை சர்பிராஸ் கான் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணி அபாரமாக விளையாடினார். ரஞ்சி கிரிக்கெட்டில் தான் ஏன் இவ்வளவு ரன்களை அடித்திருக்கிறேன் என்பதை தற்போது சர்பிராஸ் சர்வதேச அரங்கில் செய்து காட்டினார்.
மோசமான பந்துகளை அடித்து, நல்ல பந்துகளுக்கு மரியாதை கொடுத்து சர்பிராஸ் கான் ஒரு லிட்டில் மாஸ்டர் போல் விளையாடிக் கொண்டிருந்தார். 48 பந்துகளில் அரை சதம் கடந்த சர்பிராஸ் தான் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சர்பிராஸ் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தான் அவர் சடேஜாவின் தவறான கணிப்பால் ஆட்டம் இழந்தார்.
எப்போதுமே சீனியர் வீரர்கள் ஓடும் போது ஜூனியர் வீரர்கள் 100% அவர்களை நம்பி ரன் ஓடுவார்கள். அப்படித்தான் ஜடேஜா பாதி தூரம் ஓடி வந்ததை நம்பி சர்பிராஸ் கானும் ஓடினார். ஆனால் ஜடேஜா பாதியில் நின்று விட்டார். இதனால் தான் மீண்டும் கிரீசுக்கு வருவதற்கு முன் சர்பிராஸ் ரன் அவுட் ஆனார். இந்த நிலையில் தந்தைக்கு முன் அறிமுக போட்டியில் சதம் எடுக்க முடியவில்லை என்ற சோகத்தில் பெவிலியனில் சென்று கண்ணீர் சிந்தினார்.
அப்போது அங்கிருந்த சீனியர் வீரர்கள் பலரும் சர்பிராஸ்கானுக்கு கைத்தட்டி உற்சாகம் கொடுத்தனர். இந்த நிலையில் ஆட்டம் முடிந்தவுடன் ஜடேஜாவுக்கு சர்பிராஸ் கானிடம் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். மேலும் ரசிகர்கள் பலரும் தம்மை திட்டுவதை உணர்ந்த ஜடேஜா, சமூக வலைத்தளத்திலும் சர்பிராஸ் கான் ரன் அவுட் ஆனது தமது கவனக்குறைவில் தான். சர்பிராஸ் நன்றாக விளையாடினார் என்று பாராட்டி பதிவு ஒன்றை போட்டிருந்தார்.