2024இன் முதல் இரு வாரங்களில் 7500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய 46 நிறுவனங்கள்

புத்தாண்டு தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள் 7,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை 46 நிறுவனங்கள் வேலையில் இருந்து நீக்கியுள்ளன.
உலகளாவிய டெக் ஊழியர்கள் பணிநீக்கம் கடந்த ஆண்டு தலைவிரித்தாடிய நிலையில், இந்த ஆண்டும் நீடித்ததால் இந்திய ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
46 டெக் நிறுவனங்கள் தங்களது 7528 ஊழியர்களை ஜனவரி 14 ஆம் தேதி வரை பணிநீக்கம் செய்துள்ளனர்.உலகளவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள் 4,25,000 பேரை 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வேலையில் இருந்து நீக்கியுள்ளன. அதே காலகட்டத்தில் இந்தியாவில் 36,000 ஊழியர்கள் வேலை இழந்தனர். ஆன்லைன் ரென்டல் பிளாட்பார்மான பிரண்ட்டெஸ்க் 2024இல் அதன் ஒட்டுமொத்த 200 ஊழியர்களையும் வேலையில் இருந்து நீக்கியது. வெறும் 2 நிமிட கூகுள் அழைப்பில் இந்த வேலை நீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கேமிங் கம்பெனியான யூனிட்டி அதன் 25 சதவீத ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. கூகுள் அதன் ஹார்டுவேர், கோர் இஞ்சினியரிங், கூகுள் அசிஸ்டெண்ட் குழுக்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்துவதை உறுதி செய்துள்ளது. இந்த பணிநீக்கத்தால் கூகுளின் ஹார்டுவேர் மற்றும் சென்ட்ரல் இஞ்சினியரிங் குழுக்கள் கூகுள் அசிஸ்டெண்ட் பிரிவுகளை பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் சில அணிகள் மறுசீரமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றன என்று கூகுள் நிறுவனம் கூறியது.
அமேசானுக்குச் சொந்தமான ஆடியோபுக் மற்றும் பாட்காஸ்ட் பிரிவு, இ-காமர்ஸ் நிறுவனத்தில் ஒட்டுமொத்த வேலைக் குறைப்பின் ஒரு பகுதியாக, அதன் ஊழியர்களில் 5 சதவிகிதம், 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. இன்ஸ்டாகிராமில் சில தொழில்நுட்ப நிரல் மேலாளர்களை பணிநீக்கம் செய்து மெட்டா புத்தாண்டைத் தொடங்கியது. உலகளாவிய தரவு மேலாண்மை தீர்வுகள் வழங்குநரான வீம் மென்பொருள் 300 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. டிஸ்னிக்கு சொந்தமான அனிமேஷன் ஸ்டுடியோ பிக்சர் இந்த ஆண்டு வேலைகளை குறைக்க உள்ளது என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *