பிரசாதமாக கோவிலில் கொடுக்கும் பழத்தில் இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீர்கள்..!

ழுமிச்சை பழத்திற்கு உயிர் இருப்பதாக வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எழுமிச்சை பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு.

அதனால் தான் இது தேவ கனியாக சொல்லப்படுகிறது. இந்த எழுமிச்சை பழத்தை நல்லவர்கள் நல்ல சக்தியை பெறவும், தீயவர்கள் தீய சக்தியை ஏவி விடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எழுமிச்சை பழத்தை கோவிலில் கொடுக்கப்படும் போது அதன் சக்தி நல்ல சக்தியாக வழுபெற்று இருக்கும். எழுமிச்சம் பழத்தை 18, 21, 51, 54, 108, 1008 என்ற எண்ணிக்கைகளில் மாலையாக கோர்க்கபட்டு அம்மனுக்கு சார்த்தப்படுகிறது. அதில் இருந்து ஒவ்வொன்றாக பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கபடுகிறது. தெய்வ தன்மையுள்ள இந்த எழுமிச்சை பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று பலருக்கும் தெரிவதில்லை.

முக்கனிகளுக்கு கிடைக்காத சிறப்பு எழுமிச்சைக்கு கிடைக்க காரணமாக இருப்பது அதில் எந்த குற்றமும் இல்லாததே ஆகும். சில பழங்களுக்கு புள்ளி குற்றம், வண்டு குற்றம் என்று பல குற்றங்கள் கூறுவதுண்டு. ஆனால் தேவ கனியான எழுமிச்சைக்கு இது போல் எந்த குற்றங்களும் பொருந்துவதில்லை. துர்கை அம்மனுக்கு எழுமிச்சம் மாலை சாற்றி வழிபட்டு பிரசாதமாக கொடுக்கபடும் எழுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்தால் குடும்பத்தில் இருக்கும் பீடை ஒழியும். கஷ்டங்கள் நீங்கும்.

இது போல கோவிலில் பிரசாதமாக நீங்கள் வாங்கும் எழுமிச்சை பழத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். காய்ந்து போனதும் குப்பை தொட்டியில் போட்டு விடாதீர்கள். பூஜைக்கு பயன்படுத்தபடும் பூக்கள், பழங்கள் காய்ந்து போனால் கண்டிப்பாக குப்பையில் போடக் கூடாது. அது தெய்வத்தை அவமதிக்கும் செயல் போன்றது. இவ்வாறு செய்வதால் தரித்திரம் வரும். கஷ்டங்கள் ஏற்படும். நீர் நிலைகளில் போட வேண்டும். இல்லையென்றால் மரம், செடி, கொடிகளில் போடலாம்.

பல பேர் கோவிலில் கொடுக்கும் எழுமிச்சை பழத்தை வாகனங்களில் வைப்பார்கள். இது சரியான முறை. வாகனங்களில் விபத்து ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. எந்த பிரச்சனையும் இன்றி வாகனம் செயல்படும். காய்ந்த பின் அப்படியே வைத்திருக்க கூடாது. எடுத்து கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

அது போல் பீரோவில் வைக்கலாம். ஆனால் பீரோவில் வைப்பதால் வெப்பம் காரணமாக எழுமிச்சை அழுகும் நிலை வரலாம். எனவே இதனை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழில் செய்யும் இடங்களில் வைப்பது நல்லது. கல்லாப்பெட்டியில் போட்டு வைக்கலாம். வியாபாரம் விருத்தி பெறும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *