தென்னாப்பிரிக்க தொடரில் சொதப்பிய டாப் 5 இந்திய வீரர்கள்.. உங்களை எல்லாம் அழைச்சிட்டு வந்ததுக்கு…
கேப் டவுன் : தென்னாபிரிக்காவுக்கு எதிரான டி20 ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்து இருக்கிறது. இந்த சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் தொடராகவே அமைந்திருக்கிறது. டி20 தொடர் சமன்,ஒருநாள் தொடர் வெற்றி, டெஸ்ட் தொடர் சமன் கேப் டவுன் டெஸ்டில் முதல் வெற்றி என்று பல வரலாற்று சம்பவங்களை இந்தியா செய்திருக்கிறது.
இந்த தொடரில் பல இளம் வீரர்கள் மற்றும் சீனியர்கள் தங்களோடு திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். ஆனால் இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்தும் அதனை வீணடித்த டாப் 5 வீரர்கள் குறித்து தான் நாம் தற்போது காண இருக்கிறோம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூர் தான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர் தேவை என்பதால், இவரை டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எடுக்காமல் டெஸ்ட் போட்டிக்காக இந்தியா பாதுகாத்து வைத்திருந்தது. ஆனால் அது அனைத்தும் வீண் என்று ஒரே போட்டியில் அவர் காண்பித்து விட்டார்.ரசிகர்கள் சர்துல் தாக்கூரை, லார்ட் தாக்கூர் என்றுதான் அழைப்பார்கள்.
ஆனால் இவர் தாம் விளையாடிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் 19 ஓவர்கள் வீசி 101 ரன்கள் விட்டுக் கொடுத்து ஏமாற்றத்தை கொடுத்தார். இதேபோன்று பேட்டிங்கில் 24 மற்றும் 2 ரன்கள் தான் எடுத்தார். இதன் காரணமாக இவர் இரண்டாவது டெஸ்டில் நீக்கப்பட்டார்.இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சி எஸ் கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் தான். இந்தத் தொடரில் டி20, ஒருநாள் ,டெஸ்ட் என மூன்று இந்திய அணியிலும் ஸ்கூவாடில் ருதுராஜ் இடம் பெற்று இருந்தார்.