Sarfaraz khan உடன் U-19 உலககோப்பையில் விளையாடிய மற்ற நாட்டு வீரர்களின் தற்போதைய நிலை.. அடேய் பிசிசிஐ
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் சர்பிராஸ்கான் சேர்க்கப்பட்டது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது.
ஏனென்றால் இப்படி ஒரு செய்தி வராதா என்று இந்திய ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் சின்ன வயதில் இருந்தே தன்னுடைய திறமையை பல்வேறு கட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சர்பிராஸ்கான் தனது 12வது வயதில், முதன்முறையாக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய பள்ளி கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் 439 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். பொதுவாக அண்டர் 19 கிரிக்கெட் உலக கோப்பையில் விளையாடுவதே மிகவும் கடினமாக இருக்கும். இந்த சூழலில் சர்பிராஸ்கான் இரண்டு முறை அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்.
இளம் வயதிலேயே பிரபலமானதால் சர்பிராஸ்கான் 16 வயது இருக்கும்போதே 2014 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற U19 உலக கோப்பையில் களமிறங்கினார். 6 போட்டிகளில் விளையாடிய சர்பிராஸ்கான் 211 ரன்கள் குவித்தார். அதன் பிறகு மீண்டும் வங்கதேசத்தில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 355 ரன்கள் சர்பிராஸ்கான் குவித்தார்.
இந்த நிலையில் சர்பிராஸ்கான் உடன் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய மற்ற அணி வீரர்கள் எல்லாம் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். சர்பிராஸ்கானுடன் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய ரஷீத் கான் இன்று உலகின் மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளராக உருவெடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் நடைபெறும் பல கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி பெயர் பெற்றுள்ள ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக விளங்குகிறார்.