யூபிஐ பரிவர்த்தனைகளில் 5 மாற்றங்கள் அமல் – என்னென்ன தெரியுமா?

நாடு முழுவதும் அனைத்துவித பண பரிமாற்றங்களும் UPI வழியாகவே பெரும்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பணத்தை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதாலும் பாதுகாப்பான முறையாக இருப்பதாலும் பெரும்பாலான மக்கள் UPI மற்றும் டிஜிட்டல் பேமென்ட் முறைகளையே விரும்புகின்றனர்.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது டிஜிட்டல் பேமென்ட் செய்யும் UPI பயன்பாட்டில் புதிய மாற்றங்களை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

1. UPI ID ஓராண்டுக்கு மேல் செயல்படாமல் இருந்தது என்றால் அதனை செயலிழக்க செய்வதற்கு பேமெண்ட் நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

2. யுபிஐ மூலமாக 2000 க்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் இதற்கு நான்கு மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இது எதற்காக என்றால் தவறாக பணத்தை அனுப்பி இருந்தால் அந்தப் பயனாலர் நான்கு மணி நேரத்திற்குள் திரும்ப பெற்றுக் கொள்ள முடியும் என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

3. கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு யூபிஐ மூலம் பணம் பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

4. இரண்டாயிரத்துக்கும் மேல் வணிக பரிமாற்றத்தில் ப்ரீபெய்ட் பேமென்ட் கருவிகள் மூலம் பணத்தை செலுத்தும் போது 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.நாடு முழுவதும் UPI ஏ.டி.எம்களை நிறுவ ஏற்பாடு என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் QR Code- ஸ்கேன் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *