சென்னையில் ராமர் சிலை திறப்பு… 10.5 அடி உயரத்தில் கம்பீரம்!

சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் 10.5 அடி உயர்த்தில் ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள கோவில் கருவறையில் ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி வரும், 22ம் தேதி நடக்க உள்ளது.அன்றைய தினம் அனைவர் இல்லத்திலும் தீபங்கள் ஏற்றி கொண்டாடுங்கள் என்ற வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பெருமாள் கோவிலில் அயோத்தியில் ராமர் பிரதிஷ்டையை முன்னிட்டு வரும் 26-ந்தேதி வரை தினசரி மாலை சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.

சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கட் நாராயணா கோவிலில் 10.5 அடி உயரத்திற்கு ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜனவரி 04ம் தேதி கோவில் நிர்வாகத்தின் சார்பில் இந்த சிலை நிறுவப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் பெருமாள் கோவிலின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமர் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்து, இடது காலை முன்னே வைத்தபடி கம்பீரமாக மன்னர் கோலத்தில் இந்த ராமர் காட்சி தருகிறார்.

உடை, தங்க ஆபரணங்கள், வில் என அனைத்தும் மிகவும் தத்ரூபமாக, காண்போரின் கண்களை கவரும் வகையில்இந்த 10.5 அடி உயர ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பார்த்துக் கொண்டே இருக்கும் வேண்டும் என நினைக்க தோன்றும் அளவிற்கு தெய்வீகமாக முகப்பொலிவுடன் நீல நிறத்தில் இந்த ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஏராமானோர் வந்து வணங்கி செல்கின்றனர். கோவிலுக்கு வந்து காண முடியாத பக்தர்களும் சாலையில் செல்லும் போதே பார்த்து ஸ்ரீராமரை தரிசிப்பதற்கு வசதியாக வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையில் இந்த ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜனவரி 04ம் தேதி துவங்கி, ஜனவரி 22 ம் தேதி வரை ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பஜனை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *