தமிழ்நாடு அரசின் ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்..!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி” எனும் தலைப்பில் முத்திரை சின்னத்துடன் அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் நேற்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. பின்னர் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்:

1) பொதுக்கடன் 32.4 பைசா.

2) கடன் வசூல் மற்றும் மூலதன வரவு 1.1 பைசா.

3) மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 5.2 பைசா.

4) மத்திய அரசு வரிகளின் பங்கு 11.1 பைசா.

5) மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 43.4 பைசா.

6) மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 6.8 பைசா.

7) ஒரு ரூபாயில் தமிழ்நாடு அரசின் செலவு.

8) செயல்பாடுகளும் பராமரிப்புகளும் 3.3 பைசா.

9) மூலதனச் செலவு 10.5 பைசா.

10) வட்டி செலுத்துதல் 14.1 பைசா.

11) உதவித் தொகைகளும் மானியங்களும் 32.4 பைசா.

12) கடன்களை திருப்பிச் செலுத்துதல் 9.1 பைசா.

13) சம்பளங்கள் 18.7 பைசா.

14) ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் 8.3 பைசா.

15) கடன் வாங்குதல் 3.6 பைசா.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *