அதிகரிக்கும் மோசடி… இனி ஆன்லைன் கேம் விளையாட புதிய கட்டுப்பாடு..!
ஸ்மார்ட் ஃபோன்களின் ஆதிக்கம் அதிகரிக்க, அதிகரிக்க ஆன்லைன் மூலமாக பல்வேறு மோசடிகளும் நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளில் இருந்து இளைஞர்கள் வரை அனைவரும் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி பணத்தை செலவு செய்து மிகப்பெரிய மோசடி வலைக்குள் மாட்டிக் கொள்கின்றனர். இது தொடர்பாக அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பணம் சம்பந்தப்பட்ட ஆன்லைன் கேம்களை இளைஞர்கள் விளையாட அனுமதிப்பதற்கு ஒரு கட்டமைப்பை தயாரிக்கும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, அரசின் இந்த புதிய விதிப்படி ஆன்லைன் கேம்கள் அனைத்தும் இந்த ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தால் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பணத்தை உள்ளடக்காத ஆன்லைன் கேம்களுக்கு எந்தவித ஒப்புதலும் தேவையில்லை. மேலும் இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஆன்லைன் கேம் தொடர்பான ஒழுங்குமுறை கட்டமைப்பு உருவாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.