அதிகரிக்கும் நரம்பியல் கோளாறுகள்! அதிர்ச்சி அளிக்கும் தரவுகள்! பாதுகாப்பது எப்படி?

லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் நரம்பியல் பிரச்சனைகள் உலக அளவில் அதிர்ச்சி தரும் அளவிற்கு அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு அதாவது 2021 முதல் உடல்நலக்குறைவுக்கான முக்கிய காரணியாக நரம்பியல் கோளாறுகள் காரணமாக மாறியிருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

அதிலும், கடந்த மூன்று தசாப்தங்களாக நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமான அளவில் அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 43 சதவீதம் (சுமார் 3.4 பில்லியன் நபர்கள்) பாதிக்கப்பட்டுள்ளதாக லான்செட்டில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் 37 நரம்பியல் நிலைமைகள்

குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் அறிக்கையின்படி (Global Burden of Disease), காயங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் அதிகரிப்பதற்கு 37 நரம்பியல் நிலைமைகள் காரணமாக உள்ளது என்றும், இதனால், மொத்த இயலாமை, நோய் மற்றும் அகால மரணம் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கருத்து

இந்த ஆய்வின் முடிவுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த WHO தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “நரம்பியல் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் மிகவும் துன்பத்தை எதிர்கொள்கின்றன. அதோடு, பொருளாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான செலவுகள் அதிகரித்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன” என்று கூறினார்.

மேலும், “இந்த ஆய்வு, நரம்பியல் நிலைமைகளுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான தரமான பராமரிப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை அணுகுவதற்கான தேவையை புரிந்துக் கொள்ளவேண்டும். இது தொடர்பான நடவடிக்கைக்களை திட்டமிடுவதற்கான தேவைகளை உணர்த்தும் அவசர அழைப்பாக புரிந்துக் கொள்ள வேண்டும். மூளை ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. அப்போதுதான், ஒரு குழந்தை பிறந்தது முதல் பிற்கால வாழ்க்கை வரை நன்கு புரிந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும் ” என்று அவர் தெரிவித்தார்.

நரம்பியல் சிக்கல்களுக்கு காரணம்
மக்கள்தொகை அதிகரிப்பு, மக்கள் நீண்ட காலம் வாழ்வது, மாசுபாடு, உடல் பருமன், உணவுப்பழக்கம் போன்றவை தான் அதிகரித்து வரும் நரம்பியல் சிக்கல்களுக்குக் காரணமாகிறது. ஆனால், பெரும்பாலும் மேற்கூறிய காரணங்கள் பொதுவான காரணம் என்றாலும், பிரச்சனைகளுக்கு பலவிதமான காரணங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மனிதர்களை அதிகம் பாதிக்கும் பக்கவாதம்

பிற நரம்பியல் கவலைகளை விட பக்கவாதம் தான் பெரும்பாலான மக்களை பாதிக்கிறது. மூளைக்காய்ச்சல், வலிப்பு, அல்சைமர் நோய், பிறக்கும்போதே மூளையில் காயத்துடன் பிறப்பது, குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு சிக்கல்கள் இருப்பது, நீரிழிவு நோயினால் நரம்பு பாதிப்பு, மன இறுக்கம் மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிற பெரிய பிரச்சனைகள் ஆகியவற்றால் பக்கவாதம் ஏற்படுகிறது.

பதற்றம் மற்றும் தலைவலி

2021 ஆம் ஆண்டில், பதற்றம் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவை ஏற்பட காரணம் நரம்பு பிரச்சினைகளாக இருந்தது. இது கோடிக்கணக்கான மக்களை பாதித்திருக்கிறது.

நரம்பியல் தொடர்பான ஆய்வு

லான்செட்டில் வெளியிடப்பட்ட இந்த நரம்பியல் தொடர்பான ஆய்வு, முதன்முறையாக, குழந்தைகளின் மன இறுக்கம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் போன்ற நரம்பியல் வளர்ச்சிக் கோளாறுகளையும் ஆய்வு செய்தது. இந்த நரம்பியல் கோளாறுகள், 2021 இல் உலகளவில் ஐந்தில் ஒரு பங்கினரை பாதித்துள்ளது என்பதைக் கண்டறிந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *