IND vs AFG : இதெல்லாம் ரொம்ப தப்பு.. இளம் வீரர் செய்த சொதப்பல்.. அப்செட் ஆன ரோஹித் சர்மா
இந்தூர் : இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் செய்த தவறால் மூன்று பவுண்டரிகள் அடுத்தடுத்து சென்றன. அதைப் பார்த்த ரோஹித் சர்மா தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இரண்டாவதாக பந்து வீசும் போது காற்றில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக சரியாக பந்துவீச முடியாது என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.
முதல் 6 ஓவர்கள் பவர்பிளே என்றாலும், சுழற் பந்துவீச்சாளர்களை பவர்பிளேவில் பயன்படுத்துவது என்பதில் உறுதியாக இருந்தார் ரோஹித் சர்மா. அந்த வகையில் 3வது ஓவரை சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே அவர் ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அதனால், கேப்டன் ரோஹித் சர்மா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.