IND vs AFG : 2 வீரர்களின் மெத்தனம்.. சூப்பர் ஓவர் வரை சென்ற ஆப்கானிஸ்தான்.. ரோஹித் செய்த சொதப்பல்
மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் மோசமாக ரன்களை வாரிக் கொடுத்ததால் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியின் ஸ்கோரை சமன் செய்து சூப்பர் ஓவர் வரை சென்றது.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 212 ரன்கள் குவித்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி 2 ஓவர்களில் எப்படியும் ஆப்கானிஸ்தான் அணியால் வெற்றிக் கோட்டை தொட முடியாது என எண்ணிய நிலையில், ஆவேஷ் கான் 19வது ஓவரில் சொதப்பினார்.
19வது ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்திய போதும் ஆவேஷ் கான் 17 ரன்கள் விட்டுக் கொடுத்தார். முகேஷ் குமார் வீசிய 20வது ஓவரில் 19 ஓவர் எடுத்தால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. அவர் சரியாக யார்க்கர் வீச முடியாமல் அவுட்சைட் ஆஃப் திசையில் பந்து வீச முயற்சி செய்தார். ஆனால், ஆப்கானிஸ்தான் அணியின் குலாபுதீன் அபாரமாக ஆடினார். ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் எடுத்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
ஏற்கனவே, கடைசி ஓவரில் சொதப்பிய நிலையில் முகேஷ் குமாரை மீண்டும் சூப்பர் ஓவர் வீச அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. முகேஷ் குமார் மீண்டும் சூப்பர் ஓவரிலும் சொதப்பினார். முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் எடுத்தது. இந்திய அணியும் அந்த சூப்பர் ஓவரில் 16 ரன்கள் எடுத்து போட்டி சமன் ஆனது. மீண்டும் போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது.
இரண்டு முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என முடிவு செய்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்த முறை ரவி பிஷ்னோய்-ஐ பந்து வீச அழைத்தார். அது சரியாக வேலை செய்தது. இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ரவி பிஷ்னோய் 3 பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி சூப்பர் ஓவரில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
ஆவேஷ் கான், முகேஷ் குமார் தங்களின் 19 மற்றும் 20வது ஓவரில் சிந்தித்து சரியாக பந்து வீசி இருந்தால் இரண்டு சூப்பர் ஓவர் வரை போட்டி சென்று இருக்காது. அவர்கள் மெத்தனத்தால் இந்தியா பெரும் தடுமாற்றத்தை சந்தித்தது.எனினும் போராடி இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு பின் இந்தியா வெற்றி பெற்றது.