IND vs AFG-ரோகித் மட்டும் தான் பெரிய ஏமாற்றம்.. ஆனால், இதை பற்றி கவலைப்பட மாட்டார்- முரளி கார்த்திக்
மும்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும்தான் ஏமாற்றம் அளித்திருப்பதாக கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி சர்வதேச தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் சிவம் துபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக இரண்டு முறை டக்அவுட் ஆகி வெளியேறினார்.
14 மாதங்களுக்கு பிறகு இந்திய டி20 அணியில் திரும்பிய ரோகித் சர்மா முதல் போட்டியில் ரன் அவுட் மற்றும் இரண்டாவது போட்டியில் இறங்கி வந்து சிக்சர் அடிப்பதற்கு முயற்சி செய்து போல்ட் ஆனார்.