IND vs AFG-ரோகித் மட்டும் தான் பெரிய ஏமாற்றம்.. ஆனால், இதை பற்றி கவலைப்பட மாட்டார்- முரளி கார்த்திக்

மும்பை : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும்தான் ஏமாற்றம் அளித்திருப்பதாக கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்பு இந்தியா விளையாடப் போகும் கடைசி சர்வதேச தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் சிவம் துபே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் ரோகித் சர்மா தொடக்க வீரராக இரண்டு முறை டக்அவுட் ஆகி வெளியேறினார்.
சிஎஸ்கே வின் முக்கிய வீரராக திகழ்ந்த சிவம் துபே தற்போது இந்திய அணிகளும் சிறப்பாக விளையாடி வருகிறார். தமது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவம் துபே நான் இவ்வாறு சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணி மற்றும் தோனி தான். என்னிடம் எப்போதுமே இது போல் அதிரடியாக ஆடக்கூடிய திறமை இருக்கிறது.
ஆனால் என்னிடமிருந்து அதை வெளிக்கொண்டு வந்து என்னை சிறந்த வீரராக உருவாக்கியது சிஎஸ்கே வின் செயல் தான். கிரிக்கெட்டில் தேவைப்படக்கூடிய அனைத்தையும் எனக்கு சிஎஸ்கே தான் வழங்கியது. அவர்கள் தான் எனக்கு நம்பிக்கையை கொடுத்தார்கள். இதோ பார் சிவம் துபே, உன்னால் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்க முடியும். கவலைப்படாதே உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள்.
தோனி மட்டுமல்லாமல் மைக்கேல் ஹசி, பிளமிங் போன்றோர் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். அது எப்போதுமே என் மனதில் இருக்கும். சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை போல் தான் தற்போது இந்திய அணிக்காகவும் விளையாடுகிறேன். என் மீது ரோகித் சர்மா நம்பிக்கை வைத்து எனக்கான பொறுப்பை வழங்கினார்.