IND vs AFG T20 – இந்திய டி20 அணிக்கு திரும்பும் கோலி, ரோகித்.. எந்த வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு

இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜனவரி 11, 14 மற்றும் 17ஆம் தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது.

ஏனென்றால் இதன் பிறகு இந்திய அணி t20 உலக கோப்பை வரை எந்த ஒரு டி20 போட்டிகளும் விளையாடாமல் உள்ளது. இதனால் இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களை தான் உலகக்கோப்பை டி20 அணியில் சேர்க்க தேர்வு குழு பரிசீலனை செய்யும்.

இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தற்போது தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகருக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு இந்திய அணி தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை தயார் செய்வதற்காக தேர்வு குழுவினர் நேரடியாகவே அங்கு சென்று இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. டி20 உலக கோப்பைக்கு தயாராகுவதற்காக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். ரோகித் சர்மா, கோலி ஆகியோர் அணிக்கு திரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அதிக ரன்கள் எடுத்த சிஎஸ்கே வீரர் ருத்ராஜுக்கு வாய்ப்பு இருக்காது என தெரிகிறது.

இதேபோன்று ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் ஆகியோர் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. டி20 கிரிக்கெட்டில் நடு வரிசையில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் திரும்ப இருக்கிறார்.

இதேபோன்று தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாட கூடும். வேகப்பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் தீபக்சாகர், ஆவேஷ் கான் விளையாட வாய்ப்பு இருக்கிறது. வழக்கம்போல் சஞ்சு சாம்சன் டி20 அணியில் சேர்க்கப்பட மாட்டார் என்றும் தெரிகிறது. இந்த அணியில் ஒரு சில மாற்றங்களுடன் இறுதி அணியை தேர்வு குழுவினர் அறிவிக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *