IND vs AFG : டி20 அணி அறிவிப்பு.. ரோஹித், கோலிக்கு இடம்.. ஜடேஜா நீக்கம்.. முழு அணி விவரம்
மும்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஓராண்டுக்கு பின் டி20 அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.
ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். விராட் கோலியும் அணியில் இடம் பெற்று இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது.
- காயத்தில் சிக்கி இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. சஞ்சு சாம்சன் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஜிதேஷ் சர்மா அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருக்கிறார். நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் என அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்று இருக்கின்றனர்