IND vs ENG 3வது டெஸ்ட் – ராஜ்காட் ஆடுகளம் எப்படி இருக்கும்? ஜாகீர் கான் கணிப்பு.. இங்கி. எச்சரிக்கை
இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்றாவது போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கு ஆடுகளம் நல்ல முறையில் அமைக்கப்பட்டிருந்தது. எனினும் போட்டி முழுமையாக 5 நாட்கள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்காட்டில் நடைபெறுகிறது. இது ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஜாகிர் கான் இங்கிலாந்து அணிக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர் ராஜ்காட் ஆடுகளம் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆடுகளம் போல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆடுகளத்தின் தன்மையை பற்றி பேசும்போது நிச்சயமாக அது பேட்டிற்கும், பந்திருக்கும் நல்ல ஒரு போட்டியாக முதல் இரண்டு நாட்களுக்கு இருக்கும். மூன்றாவது நாளிலிருந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும் என கருதுகிறேன்.
மேலும் இந்த ஆடுகளத்தில் ரிவர்ஸ் ஸ்விங் ஒரு முக்கிய ஆயுதமாக வேகப்பந்துவீச்சாளர்கள் பயன்படுத்துவார்கள். நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் சுழற்பந்துவீச்சு ஆதிக்கம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு தலைவலி இருக்கிறது. ஜடேஜா அணிக்கு திரும்புவதால் யாரை நீக்குவது என்ற குழப்பம் கேப்டனுக்கு இருக்கும்.
ஏனென்றால் அக்சர் பட்டேலா குல்தீப் யாதவ்க்கு பதில் ஜடேஜா எடுக்கலாம். இல்லை நான்கு பேருமே பந்துவீச்சில் வைக்கலாமா என்ற குழப்பம் ஏற்படும். ஏனென்றால் பும்ராவுக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் துணையாக இருக்க வேண்டும். இதனால் அனைத்தையுமே நாளை ஆடுகளம் தான் முடிவு செய்யும். கடினம் முடிவுகளை இந்தியா நாளை எடுக்க நேரிடும் என்று ஜாகிர் கான் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஒவாய்ஸ் ஷா, ஜாகிர் கான் சொன்னது போல் ஆடுகளம் இருந்தால் அது நிச்சயம் பும்ராவுக்கும் இங்கிலாந்து அணியின் நடு வரிசை பேட்ஸ்மேனுக்கும் இடையே சரியான போட்டியாக இருக்கும். ஏனென்றால் பும்ரா இது போன்ற ஆடுகளத்தில் பந்தை நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார். குறிப்பாக அவர் பழைய பந்தை பயன்படுத்தி பந்து வீசும் போது இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக தடுமாறுகிறார்கள். மேலும் அவர் விக்கெட்டுகளை தொடர்ந்து எடுக்குகிறார், ரன்ளை கொடுக்க மாட்டார்.