IND vs ENG 4வது டெஸ்ட் – இந்தியாவின் பிளேயிங் லெவன்.. இந்த தவறை செய்யாதீங்க.. நாணி சொன்ன செம டீம்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை ராஞ்சியில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா, கேஎல் ராகுல் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய அணி பல மாற்றங்களை இந்த போட்டியில் சந்திக்கக்கூடும்.மேலும் ஆடுகளமும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஞ்சியில் மழை பெய்யக்கூட வாய்ப்பு இருப்பதால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வர்ணனையாளர் நாணி, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்திய அணிக்கு ஒரு யோசனையை கூறி இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய பிளேயிங் லெவனை தேர்வு செய்து இருக்கிறார். இதில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் தொடர வேண்டும் என்று நாணி குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது வீரராக கில் விளையாட வேண்டும் என தெரிவித்துள்ள நாணி, நான்காவது வீரராக ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். கே.எல் ராகுல் இல்லை என்பதால் டேவுதட் படிக்கல் அணிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாணி இந்த யோசனையை கூறியிருக்கிறார்.
ஐந்தாவது வீரராக ஜடேஜாவை விளையாட வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள நாணி, ஆறாவது வீரராக சர்பராஸ் கானையும் ஏழாவது வீரராக விக்கெட் கீப்பர் ஜுரலையும் அணியில் நீட்டிக்க வேண்டும் என்று நாணி தெரிவித்துள்ளார். எட்டாவது வீரராக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒன்பதாவது வீரராக முகமது சிராஜ் 10வது வீரராக குல்தீப் யாதவ்,11 வது வீரராக முகேஷ் குமார் ஆகியோரை அணியில் சேர்க்க வேண்டும் என்று நாணி தெரிவித்துள்ளார்.
ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் கூட இந்திய அணி முகேஷ் குமாருக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நாணி தெரிவித்துள்ளார். முகேஷ் குமார் தற்போது ரஞ்சி போட்டியில் 50 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளை ஒரு போட்டியில் எடுத்திருப்பதால் அவர் இந்த போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நாணி தெரிவித்துள்ளார்.ஏற்கனவே இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ள நிலையில் நான்காவது சுழற் பந்துவீச்சாளரை தேர்வு செய்தால் அது வேஸ்ட் என்று நாணி கூறியுள்ளார்.