IND vs ENG -பேஸ்பாலா? எங்க கிட்டயும் ஒரு பால் இருக்கு! இங்கிலாந்து அணியை கலாய்த்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின் சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் தன்னுடைய முதல் இடத்தை தவறவிட்டார்.
விசாகப்பட்டினம் டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா தற்போது முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் தனது youtube பக்கத்தில் பேசிய தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பும்ராவை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் பும்ரா தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தையே மாற்றி விட்டதாக பாராட்டி இருக்கிறார்.
இங்கிலாந்து அணி பேஸ்பால் என்ற யுத்தியை பயன்படுத்தி வருகிறது. ஆனால் என்னை கேட்டால் நம்மிடம் பூம்பால் இருக்கிறது. பும்ரா இரண்டாவது டெஸ்டில் மிகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் தற்போது அவர்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பர்தற்போது நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறி இருக்கிறார்.
நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். பும்ரா செய்திருப்பது இமாலய சாதனை. இதேபோன்று கில் திறமையை குறித்து யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் தன்னுடைய சதம் மூலம் அவர் எப்பேர்பட்ட வீரர் என்பதை நிரூபித்திருக்கிறார். நாங்கள் நான்காவது நாள் ஆட்டத்தை விளையாடும் போதே எங்களுக்கு நல்ல ஒரு உணர்வு இருந்தது.
எங்களுடைய சக்தி, செயல்பாடு எல்லாமே நல்ல விதத்தில் இருந்தது. இதன் மூலம் நாங்கள் வெற்றியை பெற்றோம். இதன் மூலம் தற்போது தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருக்கிறது. இங்கிலாந்த அணி கடந்த 25ஆம் ஆண்டு ஆசஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வீழ்த்தியது. அப்போது ஒரு இளைஞனாக அந்த தொடரை நான் மிகவும் ஆர்வத்துடன் பின் தொடர்ந்து வந்தேன்.
தற்போது அதே போல் ஒரு உணர்வு எனக்கு நடப்பு தொடரில் ஏற்பட்டிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.. அவருடைய வீடு கூட சௌராஷ்டிராவில் தான் இருக்கிறது. தற்போது மூன்றாவது டெஸ்ட் அங்கு நடைபெறுவதால் பும்ரா எங்களை எல்லாம் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பாரா என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.