IND vs ENG – கேஎல் ராகுலுக்கு புதிய பொறுப்பு.. சுமையை குறைக்க டிராவிட் எடுத்த புதிய முடிவு
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இரு அணிகளும் தற்போது தீவிரப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனிப்பட்ட காரணங்களை காட்டி விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் விராட் கோலிக்கு பதில் மாற்றுவீரர் யார் என்பதை இன்னும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்கள் ராகுலுக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்க டிராவிட் முடிவெடுத்துள்ளார். அதன்படி விராட் கோலி இல்லாத நிலையில் நம்பர் நான்காவது வீரர் என்ற முக்கியமான இடத்தில் கே எல் ராகுலை விளையாட வைக்க ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.நம்பர் நான்காவது வீரர் என்பது ஒவ்வொரு அணியிலுமே ஸ்டார் அந்தஸ்தை உடைய வீரர்கள் தான் விளையாடுவார்கள்.
இந்த வகையில் விராட் கோலி இடத்தில் கே.எல் ராகுலை களம் இறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அதே சமயம் விக்கெட் கீப்பராக இருந்து கொண்டு கே.எல் ராகுலால் நம்பர் நான்காவது இடத்தில் விளையாடி பெரிய ஸ்கோர் எடுக்க முடியாது என்பதால் கே எல் ராகுலின் சுமையை குறைக்க புதிய விக்கெட் கீப்பர் ஒருவரை அணியில் கொண்டு வர ராகுல் டிராவிட் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
அதன்படி விக்கெட் கீப்பராக அணியில் ஏற்கனவே இருக்கும் கே எஸ் பரத் பிளேயிங் லெவனுக்குள் வர அதிக வாய்ப்பு உள்ளது. கே எஸ் பரத், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதம் அடித்தார். மேலும் அந்த சதத்தை ராமருக்கு சமர்ப்பிப்பதாக சைகை காட்டினார்.
இதன் மூலம் கே எஸ் பரத்துக்கு அணியில் இடம் கிடைத்து விடும் என்று ரசிகர்கள் அப்போதே கூறி வந்தனர். அந்த வகையில் தற்போது விராட் கோலி இல்லாததால் ராகுலை பேட்ஸ்மேனாக களம் இறக்கி கே எஸ் பரத்தை அணியில் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது இதனால் புதிய பொறுப்பில் கே எல் ராகுல் பட்டையை கிளப்புவாரா? விக்கெட் கீப்பரான கே எஸ் பரத் மீண்டும் அம்பு விடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.