IND vs ENG Test: பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை காலிசெய்த அஸ்வின்… கபில் தேவ் சாதனை சமன்! விவரம் இதோ!
இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட்:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . அதன்படி , முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது . முதல் இன்னிங்ஸ் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கியது . முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி . பின்னர் இந்திய அணி களம் இறங்கியது .
இதில், இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 180 பந்துகளில் 87 ரன்களும், கே.எல்.ராகுல் 123 பந்துகளில் 86 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 436 ரன்களை குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவின் படி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 77 ஓவர்கள் முடிவின் படி 316 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணி வீரர் ஒல்லி போப் அதியரடியாக விளையாடி 148 ரன்களை எடுத்துள்ளார்.
கபில் தேவ் சாதனையை சமன் செய்த அஸ்வின்:
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்ஸை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்தார்.
அந்த சாதனை என்னவென்றால்டெஸ்ட் கிரிக்கெட்டில்25-வது இன்னிங்ஸ்களில் ஸ்டோக்ஸ்ஸிற்கு எதிராக பந்துவீசியுள்ள அஸவின் அவரை 12 ஆவது முறையாக வீழ்த்தியுள்ளார். மேலும் இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட வீரரை அதிக முறை வீழ்த்தியவர் என்ற சாதனையில் முதலிடத்தில் இருந்த கபில் தேவை அவர் சமன்செய்துள்ளார். முன்னதாக, இந்திய வீரர் கபில் தேவ் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முடாசர் நாசரை 12 முறை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அஸ்வின் பென் ஸ்டோக்ஸை 12 வது முறையாக வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.