IND vs ENG – யுவராஜ், ஹர்பஜன் வயிறு எரிய போகுது.. 3வது டெஸ்டில் அஸ்வின் படைக்க போகும் வரலாற்று சாதனை
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்காட்டில் வரும் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் ராஜ்காட்டுக்கு சென்றுள்ளனர். இந்தப் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மாபெரும் சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட் எடுத்தால், 500 விக்கெட்டை அதிவேகமாக எடுத்த 2வது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருப்பார். ஆனால் முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்காத அஸ்வின், 2வது இன்னிங்சில் 3 முக்கிய விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
இந்த நிலையில் ராஜ்கோட்டில் ஒரு விக்கெட் எடுத்தால் 500 விக்கெட் எடுத்த 2வது இந்திய வீரர் மற்றும் முரளிதரனுக்கு பிறகு அதிவேகமாக இந்த மைல்கல்லை தொட்ட வீரர் என்ற சாதனை படைக்கும் வாய்ப்பு இன்னும் அப்படியே இருக்கும்.
அஸ்வின் 97 போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
இதற்கு முன்னால் இலங்கை அணியின் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தற்போது இரண்டாவது இடத்தில் அணில் கும்ப்ளே 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது கடந்த 2006 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டை கைப்பற்றினார்.
இதனால் அஸ்வினுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அஸ்வின் குறித்து யுவராஜ் சிங் பல எதிர்மறை கருத்துக்களை கூறி இருக்கிறார். இதற்கு காரணம், தன் நண்பன் ஹர்பஜன் சிங் ரெக்கார்டை அஸ்வின் உடைத்துவிட்டாரே என்ற வயிற்று எரிச்சலை அவர் பல முறை காட்டி இருக்கிறார். மேலும், ஹர்பஜன் சிங்கும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் தான், அஸ்வின் விக்கெட்டை எடுப்பதாக கூறி இருக்கிறார். இதனால், அஸ்வின் 3வது டெஸ்டில் 500 விக்கெட்டை எடுத்த உடன், ஃபயர் இன்ஜினை எதற்கும் தயாராக வைத்திருக்க சொல்லுங்கள்.