IND vs SA : ரோஹித் காப்பாற்ற மாட்டார்..ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த முடிவு.. டீமில் காத்திருக்கும் ஆப்பு
கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் ரன் குவிக்கவில்லை என்றால் டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் தன் இடத்தை இழக்க நேரிடும். அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் மற்றும் பவுன்ஸ் ஆகும் பந்துகளை ஆடுவதில் சிக்கல் உள்ளது. அது போன்ற பந்துகளை அவர் அடித்து ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில், இனியும் தனக்கு ஆதரவாக இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா கூட தன்னை காப்பாற்ற முடியாது என்ற முடிவுக்கு அவர் வந்து இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், இன்னும் தன் இடத்தை நிலையாக பிடிக்கவில்லை. அப்படி இருந்தும் கேப்டன் ரோஹித் சர்மா, தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ரஹானேவுக்கு பதில் ஸ்ரேயாஸ் ஐயரை தான் அணியில் சேர்க்க வேண்டும் என வாதாடி அவரை அணியில் சேர்த்தார்
ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்த போது ரஹானேவுக்கு தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு அதிக அனுபவம் இருந்தும் அவரை அணியில் சேர்க்க மறுப்பு தெரிவித்து இருந்தார் ரோஹித் சர்மா. ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆதரவாக ரோஹித் சர்மா இருந்தாலும் அது இனியும் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால் நிச்சயம் அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் அணியில் மாற்றம் இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் இன்னும் தன்னை நிரூபிக்காத ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவார்.
இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் வலைப் பயிற்சியில் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள தீவிர பயிற்சியை மேற்கொண்டார். நீண்ட நேரம் பயிற்சி செய்த அவர், பெரும்பாலும் பவுன்ஸ் ஆகும் பந்துகளை எதிர்கொண்டு பயிற்சி செய்தார். அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்க தீவிரமாக இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பினால், அஜின்க்யா ரஹானே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அப்போது ரோஹித் சர்மாவால், ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்தை காப்பாற்ற முடியாது