IND vs SA : கேப் டவுன் டெஸ்ட்டில் புது வரலாறு.. ஒரே நாளில் 23 விக்கெட்.. 134 வருட ரெக்கார்டு காலி

கேப் டவுன் : இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 134 ஆண்டுகளுக்கு பின் கிரிக்கெட்டில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் சேர்ந்து மொத்தம் 23 விக்கெட்களை வீழ்த்தி உள்ளன. முதல் இன்னிங்க்ஸில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 55 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. இந்திய அணியின் முகமது சிராஜ் 6 விக்கெட்களும், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 153 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. ரபாடா, என்கிடி, பர்கர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஒரு ரன் அவுட் செய்தது தென்னாப்பிரிக்கா. அதன் பிறகு முதல் நாள் ஆட்டத்தின் இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 62 ரன்கள் சேர்த்து இருந்தது. முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் 23 விக்கெட்கள் வீழ்ந்தன.

இரண்டாவது இடத்தில் 1890இல் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான போட்டி இடம் பெற்றுள்ளது. அந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 22 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டு இருந்தன. அந்த சாதனையை இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் 23 விக்கெட்கள் வீழ்த்தி முறியடித்து இருக்கின்றன.

2019இல் இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் முதல் நாள் 20 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. ஆனால், அது அனுபவமற்ற அயர்லாந்து அணியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இப்போது இந்தியா – தென்னாப்பிரிக்கா என இரண்டு அனுபவமிக்க வீரர்களை கொண்ட அணிகள் முதல் நாள் ஆட்டத்தில் 23 விக்கெட்களை இழந்து அதிசயத்தை நிகழ்த்தி உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *