இந்தியா கூட்டணிக்கட்சி தலைவர்கள் போராட்டம் அறிவிப்பு..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில், வரும் 31-ஆம் தேதி பேரணி நடைபெற உள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடைய கைது நடவடிக்கையை கண்டித்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 31-ஆம் தேதி கண்டனப் பேரணி நடைபெறும் என்று இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.
டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் தலைவர்கள், பேரணி அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது, மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது, எதிர்க்கட்சிகளை விலைக்கு வாங்குவது ,போலி வழக்குகள், கைது என, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒழிப்பதற்கு சதி நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.