டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஒவ்வொரு அணிக்கு எதிராக பெற்ற வெற்றி எவ்வளவு?முதலிடம் எந்த அணி தெரியுமா
மும்பை : எத்தனை கிரிக்கெட் வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட்டின் வடிவம். டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள்தான் காலத்தின் அழிக்க முடியாத இடத்தில் இருப்பார்கள்.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை நோக்கி தற்போது இந்தியா போன்ற அணிகள் வரத் தொடங்கி இருப்பது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு நல்லதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒவ்வொரு அணிக்கு எதிராக எவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். உலகில் மிக பலம் வாய்ந்த அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான். ஆனால் இந்திய தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தான் அதிகம் வெற்றிகளை பெற்றிருக்கிறது.
இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 32 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பட்டிகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இங்கிலாந்து அணி தான். இங்கிலாந்துக்கு எதிராக 31 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் இரண்டு டெஸ்ட்டில் வென்றால் கூட இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்து விடும்.
வெஸ்ட் இண்டீஸ் எதிராக 23 டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய அணி நியூசிலாந்துக்கு மற்றும் இலங்கைக்கு எதிராக தலா 22 டெஸ்ட் போட்டிகளை வென்றிருக்கிறது. தென்னாபிரிக்காவுக்கு எதிராக 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 11 போட்டிகளை வென்று இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்பது போட்டிகளை தான் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 16 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இந்திய அணி விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஜிம்பாபேவுக்கு எதிராக 7 போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி, அதில் வெற்றி பெற்றிருக்கிறது.