‘பாக்சிங் டே’ டெஸ்டில் இந்தியா தோல்வி: ரஹானே போலவே புஜாராவும் சூசக வீடியோவா?

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) முதல் தொடங்கியது. ‘பாக்சிங் டே’ போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சுவதாக அறிவித்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனா இந்தியா 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 408 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 131 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குப் பிறகு, இந்திய வீரரான அஜிங்கிய ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,”ரெஸ்ட் இல்லாமல் தொடர்ந்து பயிற்சி செய்கிறேன்” என பதிவிட்டார். இந்திய அணி படுதோல்வியை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில், ரஹானேவின் இந்த பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக மாறியது. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பினர். அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புஜாரா பதிவு

இந்நிலையில், ரஹானேவைத் தொடர்ந்து இந்திய அணியின் மூத்த வீரரான சேதேஷ்வர் புஜாரா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர், “ரஞ்சி டிராபி தயார் மோடு” என்று பதிவிட்டுள்ளார். இதனையும் தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர் கமெண்டில் ‘ரஞ்சி டிராபிக்கு ஒயிட் பாலில் தயார் ஆகுகிறீர்களா?’ என்று கேள்வி கேட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்கள் சூசகமாக வீடியோ வெளியிட்டு வருவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ரஹானே மற்றும் புஜாரா டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு நீண்ட காலமாக விளையாடியவர்கள். 85 போட்டிகளில் விளையாடியுள்ள அஜிங்க்யா ரஹானே 38.46 சராசரியுடன் 5077 ரன்கள் எடுத்துள்ளார்.அவர் கடைசியாக ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

கங்குலி கருத்து 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம், ரஹானே மற்றும் புஜாராவை தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்திற்கு தேர்வு செய்யாத தேர்வுக் குழு எடுத்த முடிவு குறித்து கேட்கப்பட்டது. விளையாட்டு ஒருவருடன் என்றென்றும் நிலைத்திருக்காது என்றும், ரஹானே மற்றும் புஜாரா இருவரும் தேசிய அணிக்கு சிறப்பாக பணியாற்றியிருந்தாலும், புதிய பேட்டர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒரு கட்டத்தில் நீங்கள் புதிய திறமைகளை விளையாட வேண்டும். அது நடக்கும், இந்தியாவில் மகத்தான திறமை உள்ளது மற்றும் அணி முன்னேற வேண்டும். இந்தியாவுக்காக புஜாரா மற்றும் ரஹானே மகத்தான வெற்றியைப் பெற்றனர், விளையாட்டு எப்போதும் உங்களுடன் ஒரு நிகழ்வின் ஓரத்தில் இருக்காது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *