2031க்குள் இந்தியா உயர் நடுத்தர வருமானப் பொருளாதாரமாக மாறும்: அறிக்கையில் கணிப்பு
2031-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உயர் நடுத்தர வருமானம் பெறும் பொருளாதாரமாக (upper middle-income country) மாறும் என்று அறிக்கை ஒன்று கணித்துள்ளது.
வரும் நிதியாண்டில் (2024-2025) இந்தியப் பொருளாதாரம் 6.8 சதவீத வளர்ச்சியை எட்டும் என மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில் (Crisil) மதிப்பிட்டுள்ளது.
மேலும், 2031-ம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக இந்தியா மாறும் என அந்த அறிக்கை கணித்துள்ளது.
இந்தியாவை உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களின் பின்னணியில் 2031-ஆம் ஆண்டளவில் இந்தியா இந்த முக்கிய மைல்கல்லை கடக்கும் என்று கிரிசில் கணித்துள்ளது.
2025 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக உயரும் என்றும், நடப்பு நிதியாண்டில் எதிர்பார்ப்புகளை விட 7.6 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும் கிரிசில் இந்தியா அவுட்லுக் அறிக்கை தெரிவித்துள்ளது.
2025 முதல் 2031 வரையிலான ஏழு ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டொலர்களைக் கடந்து 7 டிரில்லியன் டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 7 ஆண்டுகளில் இந்த சாதனையை இந்தியா அடையும்.
இந்த காலகட்டத்தில் சராசரி வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதத்துடன் இந்தியா உலகின் மூன்றாவது பாரிய பொருளாதாரமாக மாறும் என்று கிரிசில் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
2031ஆம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருமானக் குழுவில் இந்தியா சேரும், அதற்குள் நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 3,73,500-ஐ அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.