India vs England 3rd Test, 4th Day: அம்மாவின் உடல்நிலை ஓகே – மீண்டும் அணியில் இணையும் அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜாக் கிராலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 500 விக்கெட் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டினார். குறைந்த டெஸ்ட் போட்டிகள் (98) மற்றும் குறைந்த பந்துகளை (25,714) வீசி 500 விக்கெட்களை கைப்பற்றி வீரர்களில் இரண்டாவது இடத்தில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் முடிந்த போது அவர் தெரிவித்ததாவது, ““நீண்டதொரு பயணமாக இது அமைந்துள்ளது. இந்த சாதனையை என் அப்பாவுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். அனைத்து நேரத்திலும் என்னுடன் அவர் இருந்துள்ளார். நான் பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால், எதிர்பாராத விதமாக சுழற்பந்து வீச்சாளர் ஆனேன்.

நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது புதிய பந்தில் பவுலிங் செய்ய முத்தையா முரளிதரன் விரும்பவில்லை. அதனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. டீசென்டான முதல் தர கிரிக்கெட் அனுபவம் எனக்கு இருந்தது. நான் டெஸ்ட் பவுலரா என சந்தேகித்த நபர்களும் உள்ளனர். இதோ 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த சாதனை மோசமானது இல்லை. நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.

இந்த நிலையில் தான் 500ஆவது விக்கெட் கைப்பற்றிய அதே நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்ப சூழல் காரணமாக சென்னை திரும்பினார். இதன் காரணமாக 3ஆவது நாளான நேற்று அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் மாற்று வீரராக விளையாடினார். அஸ்வின் இல்லாத நிலையில், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவர் மட்டுமே மாறி மாறி பந்து வீசினர்.

இந்த நிலையில் தான் அம்மாவின் உடல்நிலை பிரச்சனை காரணமாக சென்னை திரும்பிய அஸ்வின் தற்போது அம்மாவின் உடல்நிலை எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில் இன்று அணியில் இணைகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், இன்று இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தால் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்திய அணி அதிகமாக ரன்கள் குவித்து டிக்ளேர் செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *