இந்தியா உலகை மாற்றுவதில் முன்னிலை வகிக்கப்போகிறது: பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வீடியோ

உலகை மாற்றும் விடயத்தில் இந்தியா முன்னிலை வகிக்கப்போகிறது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வீடியோ
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மகிழ்ச்சியான நினைவுகளிலிருந்து இன்னமும் வெளியே வரவில்லை என்பதை அவர் எக்ஸில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று காட்டுகிறது.
பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் அரசு முறைப் பயணம் செல்லும்போதெல்லாம், அவர்கள் மரபுகளை மீறியதைக் குறித்த செய்திகள் வெளியாவதை கவனித்திருக்கலாம்.
ஆனால், இந்தியாவுக்கு வந்த தலைவர்களில் சிலர் தாங்கள் ஒரு நாட்டின் தலைவர் என்பதையே மறந்து ஆடிப்பாடிய சம்பவங்கள் நடந்ததுண்டு. (அதே தலைவர்கள், அரசியல் காரணங்களுக்காக அந்தர் பல்டி அடித்ததும் உண்டு).
ஆனால், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்தியாவுக்கு வந்து சென்று ஒரு வராம் கடந்துவிட்டது என்றாலும், அவருக்கு அந்த நாட்கள் மகிழ்ச்சியாக அமைந்தன என்பதை அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று காட்டுகிறது.
இந்தியா உலகை மாற்றுவதில் முன்னிலை வகிக்கப்போகிறது
அந்த வீடியோவில், உலகை மாற்றும் விடயத்தில் இந்தியா முன்னிலை வகிக்கப்போகிறது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு மேற்கொண்ட அசாதாரண பயணம் குறித்து ஒரு பார்வை என்ற தலைப்பில் எக்ஸில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மேக்ரான்.
அந்த வீடியோவில், இந்திய குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மேக்ரான் பயணித்த பிரபல சுற்றுலாத்தலங்கள், அவர் சுவைத்த உணவு வகைகள், அவருடன் அளவளாவிய தலைவர்கள், அவருக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு, அவர் மாணவர்களுடன் அளவளாவியது, இருதரப்பு உறவுகள் என பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா போன்ற ஒரு நாடு ஒரு வலிமையான ஜனநாயக நாடு என்று கூறும் வகையில், அந்நாட்டில், மக்கள்தொகை, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்து விடயங்களும் உள்ளன. எனவே, உலகை மாற்றும் விடயத்தில் இந்தியா முன்னிலை வகிக்கப்போகிறது என்று தான் வெளியிட்டுள்ள வீடியோவில் மேக்ரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.