இந்தியா காந்தி கனவு திட்டத்தைக் கையில் எடுக்கும் மோடி.. இது வேற லெவல் விஷயமாச்சே..!!
டாடா குழுமம், டவர் செமிகண்டக்டர் மற்றும் டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து, மொஹாலியில் உள்ள செமிகண்டக்டர் லேப் (எஸ்சிஎல்) மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் ஒன்பது ஏல விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
48 ஆண்டுகள் பழமையான இந்த ஆய்வகத்தை நவீனமயமாக்க மத்திய அரசு சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது இருக்கும் ஒரே சிப் உற்பத்தி தொழிற்சாலை, அதுவும், அரசுக்கு சொந்தமான தொழிற்சாலை தான் இந்த Semiconductor Laboratory. இந்தியா காந்தி பிரதமராக இருந்த போது சீனா, தைவான் ஆகிய நாடுகளுக்கு முன்னோடியாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சிப் தான் சந்திரயான் போன்ற விண்வெளி ஆய்வு திட்டங்கள், பாதுகாப்புத் துறை திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் சிப்கள் அனைத்தும் அரசு திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்து இஸ்ரோ கீழ் இயங்கி வருகிறது. சொல்லப்போனால் Semiconductor Laboratory குறித்துப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை, இந்திரா காந்தி திட்டமிட்டது போல் நடந்திருந்தால் இந்தியா தான் உலக நாடுகளுக்கே சிப் சப்ளையராக இருந்திருக்க வேண்டும், ஆனால் ‘அந்த’ ஒரு விபத்து நாட்டின் எதிர்காலத்தைத் தலைகீழாக மாற்றியுள்ளது.