30 வயதுக்கு மேல் அறிமுகமாகி 100 டெஸ்ட் விக்கெட்டுகளுக்கும் அதிகமாக எடுத்த இந்திய பவுலர்

இந்தியாவுக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் 1979 முதல் 1983 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய வீரராக திலீப் தோஷி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 வயதுக்கு மேல் அறிமுகமான இந்திய வீரராக இருக்கும் தோஷி, 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலராகவும் உள்ளார்.

உலக அளவில் இவரை சேர்த்து மொத்து நான்கு பவுலர்கள் மட்டுமே 30 வயதுக்கு மேல் டெஸ்ட் போட்டி விளையாட தொடங்கி 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.

குஜராத்தை பூர்வீகமாக கொண்டிருக்கும் திலீப் தோஷி பெங்கால் அணிக்காக கிரிக்கெட் விளையாடினார். கடந்த 1979இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்லோ லெப்ட் ஆர்ம் ஆர்தோடாக்ஸ் பவுலரான திலீப் தோஷி, டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய பவுலராக அங்கம் வகித்தார். துல்லியமாகவும், கன்சிஸ்டன்டாகவும் பந்து வீசக்கூடிய பவுலராக இருந்து வந்தபோதிலும் மேட்ச் வின்னராக ஜொலிக்க தவறினார்.

அத்துடன் மற்றொரு இடது கை ஸ்பின்னர் மனிந்தர் சிங் வருகை, இவருக்கான வாய்ப்பை பறிக்கும் விதமாக அமைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார் திலீப் தோஷி. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

டெஸ்ட் போல் ஒரு நாள் போட்டிகளிலும் முத்திரை பதிக்கும் விதமாக விளையாடியபோதிலும், அணியின் சமநிலையை கருத்தில் கொண்டும், இவருக்கு மாற்றாக இடது கை ஸ்பின்னராக ரவி சாஸ்த்ரி இருந்த காரணத்தாலும் ஓரங்கட்டப்பட்டார்.

இந்தியாவுக்காக 33 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 114 விக்கெட்டுகளையும், 15 ஒரு நாள் போட்டிகளில் 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். நான்கு ஆண்டுகள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் விளையாடி இந்தியாவின் வெற்றிக்காக சில போட்டிகளில் பங்களிப்பையும் வெளிப்படுத்திய திலீப் ஜோஷியின் பிறந்தநாள் இன்று.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *