உறவினரை ஏமாற்றி அமெரிக்காவுக்கு அழைத்துவந்த இந்திய வம்சாவளி தம்பதி: செய்த மோசமான செயல்…
தங்கள் உறவினர் ஒருவரை, அமெரிக்காவில் கல்வி கற்க வைப்பதாகக் கூறி ஏமாற்றி இந்தியாவிலிருந்து அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதியர் சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்கள்.
உறவினரை ஏமாற்றி அமெரிக்காவுக்கு அழைத்துவந்த இந்திய வம்சாவளி தம்பதி
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் வாழும் ஹர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh, 30) குல்பீர் கௌர் (Kulbir Kaur, 43) தம்பதியர், தங்கள் உறவினரான இளைஞர் ஒருவரை (18 வயதுக்குக் குறைவானவர்), அமெரிக்காவில் கல்வி கற்க வைப்பதாகக் கூறி இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்துவந்துள்ளனர்.
ஆனால், இந்தியா வந்ததும், அவரது பாஸ்போர்ட் விசா முதலான ஆவணங்களை வாங்கிவைத்துக்கொண்டு அவரை தங்கள் கடையிலும், பெட்ரோல் நிலையத்திலும் வேலை செய்ய வற்புறுத்தியுள்ளனர்.
அவருக்கு குறைவான சாப்பாடு, குறைவான ஊதியம் கொடுத்ததுடன், அவரை CCTV கமெரா மூலம் கண்காணித்துவந்துள்ள தம்பதியர், அவரை அலுவலகத்தின் பின்னாலுள்ள ஒரு அறையில் தங்கவைத்துள்ளார்கள்.
தனது புலம்பெயர்தல் ஆவணங்களை கொடுக்குமாறு அவர் கேட்டபோதும், இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோதும், அவரை முடியை பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்து, காலால் மிதித்திருக்கிறார்கள்.
ஒரு நாள் ஓய்வு தருமாறு கேட்டதற்கு, அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியும் இருக்கிறார்கள் அந்த தம்பதியர்.
தீர்ப்பு திகதி அறிவிப்பு
தம்பதியர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்கள் குற்றவாளிகள் என நீதிபதிகள் முடிவு செய்துள்ளார்கள். அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்களுடைய தண்டனைக்காலம் முடிந்த பிறகும், ஐந்து ஆண்டுகள் வரை அவர்கள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார்கள்.