புதிய உச்சம் தொட்ட இந்திய பங்கு சந்தைகள்
இந்திய பங்குச் சந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்டன. நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 371.95 புள்ளிகள் உயர்ந்து 72,410 ஆகவும்.
நிஃப்டி 123.95 புள்ளிகள் உயர்ந்து 21,778 ஆகவும் நிலைகொண்டது. அதிகபட்சமாக கோல் இந்தியாவின் பங்கு மதிப்பு 4.20%, எம் எம் 2.75%, ஹீரோ மோட்டாகார்ப் 2.68%, என்டிபிசி 2.56% ஏற்றம் கண்டன. அதானி எண்டர்பிரைசஸ் 1.18%, எல்&டி 0.73%, அதானி போர்ட்ஸ் 0.73%, ஈய்ஷர் மோட்டார்ஸ் 0.68% சரிவைக் கண்டன.
நடப்பு ஆண்டில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்ட டாப் 10 பங்குச் சந்தைகளில் ஒன்றாக இந்திய பங்குச் சந்தை இடம்பிடித்துள்ளது.