விராட் கோலி இல்லாமல் இந்திய அணியா? பழசு எல்லாம் மறந்து போச்சா.. முன்னாள் பாகிஸ்தான் வீரர் எதிர்ப்பு

வரும் 2024 டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோலி இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்று வெளியான செய்திக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது இர்பான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இங்கு ஆடுகளம் தோய்வாக இருக்கும் என்பதால் விராட் கோலி இந்தத் தொடருக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்று தேர்வு குழு கருதுவதாக செய்திகள் வெளியானது. இதற்கு ஏற்கனவே இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது இர்பான், விராட் கோலி இல்லாமல் உங்களால் எப்படி அணியை உருவாக்க முடியும். இதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஏனென்றால் உங்களால் அது முடியாது. விராட் கோலி இந்திய அணியின் மிகச் சிறந்த வீரர். கடந்த உலகக் கோப்பையின் போது விராட் கோலி எவ்வாறு சிறப்பாக செயல்பட்டார் என்பதை நாம் அனைவருமே பார்த்தோம்.

இந்தியா விளையாடிய மூன்று நான்கு போட்டிகளில் விராட் கோலியே தனி ஆளாக நின்று அணியை வெற்றி பெற வைத்தார். விராட் கோலி சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் ஆட்டம் இழந்து இருந்தால், நிச்சயம் இந்திய அணி மூன்று நான்கு போட்டிகள் ஆவது தோற்றிருக்கும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்த பிறகு விராட் கோலி தான் தனி ஆளாக இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

விராட் கோலி t20 உலக கோப்பைக்கு சரி வருவாரா என்று யோசித்தால், அவர்கள் தெரு கிரிக்கெட் விளையாடுவதற்கு தான் லாய்க்கு. டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே ஸ்ட்ரைக் ரேட் மிகவும் முக்கியம். நீங்கள் 10 பந்தில் 30 ரன்கள் எடுத்தால் அது எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அதுவே அதிக பந்துகளை எடுத்துக்கொண்டு ரன்களை குறைவாக அடித்தால் அது நமது அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்று முகமது இர்பான் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *