அமெரிக்காவில் தீ விபத்தில் சிக்கி இந்திய இளைஞர் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஹார்லெம் பகுதியில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த குடியிருப்பில் திடீரென லித்தியம் பேட்டரி ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் முழுவதும் தீப்பரவியுள்ளது.

இதன்போது கட்டடத்தில் இருந்த சிலர் கீழே குதித்து தப்பியோடியுள்ளதுடன், 17 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்திய தூதரகம் வெளியிட்ட தகவல்
எனினும், பாசில் கான் (வயது 27) என்ற இந்திய இளைஞர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நியூயோர்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரின் குடும்பத்தினருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தூதரகம் அறிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *