2023-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான இருசக்கர வாகனம்: முதலிடத்தில் ஸ்பிளென்டர் பிளஸ்
2023-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்களில் முதலிடம் பிடித்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் பிளஸ்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ அறியப்படுகிறது.
நடப்பு ஆண்டில் ஸ்பிளென்டர் பிளஸ் இருசக்கர வாகனம் மொத்தமாக 25,94,139 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது. அதன் மூலம் நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப விற்பனையில் ஹீரோவாக ஜொலிக்கிறது. மூன்று வேரியண்ட்களில் ஸ்பிளென்டர் கிடைக்கிறது. இதன் தொடக்க விலை ரூ.75,141 (எக்ஸ் ஷோ-ரூம் விலை). ட்யூப்லெஸ் டயர்களை கொண்டுள்ளது இந்த வாகனம்.
2023-ல் விற்பனையான டாப் 10 இருசக்கர வாகனங்கள்
ஸ்பிளென்டர் பிளஸ் – 25,94,139
ஹோண்டா ஆக்டிவா – 13,45,896
டிவிஎஸ் ஜூப்பிட்டர் – 7,16,202
ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ் – 5,27,978
சுஸுகி அக்சஸ் – 5,10,427
டிவிஎஸ் ரைடர் 125 – 4,60,528
பஜாஜ் பல்ஸர் – 4,11,000
பஜாஜ் பிளாட்டினா – 4,07,456
ஹோண்டா ஷைன் – 3,44,516
டிவிஎஸ் Ntorq – 3,15,840