இந்தியாவின் முதல் CNG ஆட்டோமேட்டிக் கார்கள்.. தயாராகும் டாடா!
கடந்த சில ஆண்டுகளாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புதிய கார்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் வாகன பிரியர்களை கவர்ந்து வருகிறது. அதே போல கடந்த சில ஆண்டுகளில், சிஎன்ஜி கார்கள் அவற்றின் முந்தைய வெர்ஷன்களுடன் ஒப்பிடும்போது பல அம்சங்களை கொண்டு அறிமுகமாகி வருகின்றன.
இந்த நிலையில் நிறுவனம் சமீபத்தில் டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG) ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் சிஎன்ஜி (Tigor CNG) செடான் ஆட்டோமேட்டிக் மாடல்களை பற்றி தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்களில் டீஸ் செய்துள்ளது. CNG கார்களில் பல வாடிக்கையாளர்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்குமா என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயாராகி வருகிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
Tiago CNG மற்றும் Tigor CNG ஆகிய 2 கார்களின் AMT மாடல்களும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ள நிறுவனம் இந்த 2 மாடல்களுக்கான புக்கிங்ஸை ரூ. 21,000 என்ற டோக்கன் தொகையில் ஓபன் செய்துள்ளது. எனவே ஆர்வமுள்ள நபர்கள் இந்த கார் மாடல்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பிறகு விசிட் செய்யலாம். மேலும் இவை இந்தியாவில் முதல் CNG ஆட்டோமேட்டிக் கார்களாகவும் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. அதாவது டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்கள் தான் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு வரும் முதல் சிஎன்ஜி கார்களாக இருக்கும்.
Tiago CNG ஆட்டோமேட்டிக் மாடலானது XTA, XZA+ மற்றும் XZA NRG என மொத்தம் மூன்று வேரியன்ட்ஸ்களிலும், அதே நேரம் Tigor CNG ஆட்டோமேட்டிக் மாடலானது XZA மற்றும் XZA+ என மொத்தம் 2 வேரியன்ட்ஸ்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 கார்களும் வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பவர் ட்ரெய்ன்:
பவர்டிரெய்னை பற்றி பேசுகையில் இந்த 2 கார்களுமே 1.2-லிட்டர், 3-சிலிண்டர், NA எஞ்சினைபெறுகின்றன, இது 86hp பவர் 113Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அதே நேரம் CNG மோட்-ல் இந்த கார்கள் 73hp பவர் மற்றும் 95Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும். CNG மாடல்கள் 5-ஸ்பீட் AMT-யை பெறுகின்றன, மேலும் 5-ஸ்பீட் மேனுவல் ஆப்ஷனும் உள்ளது.
மெதுவாக நகர்ந்து செல்ல நேரிடும் ட்ராஃபிக்கை கருத்தில் கொண்டும், பார்க்கிங்கின் போதும் CNG ஆட்டோமேட்டிக் வாகனங்களுக்கு குறைந்த வேகத்தில் இயக்கக்கூடிய தன்மையை வழங்க, கியர்பாக்ஸை மாற்றி அமைத்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறுகிறது.மேலும் 2 கார்களுமே ட்வின்-சிலிண்டர் டெக்னலாஜியை கொண்டு பூட் ஸ்பேஸை சேமிக்க உதவுகின்றன.
அம்சங்கள்:
அம்சங்களைப் பொறுத்தவரை இந்த கார்கள் 14-இன்ச் சக்கரங்கள், எல்இடி டிஆர்எல்எஸ் உடன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7.0 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் ஹர்மன் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் & ஃபோல்டபிள் விங் மிரர்ஸ் உள்ளிட்ட பல கொடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்டவை தவிர Tigor CNG மாடல் கூடுதலாக ரெயின்-சென்சிங் வைப்பர்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் அம்சங்களை பெறுகிறது.